புத்தாண்டு தினம்: முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து அமைச்சர்கள் வாழ்த்து!!!

சென்னை, டிசம்பர்-31

நிர்வாகத்திறனில் தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதற்காகவும், புத்தாண்டை ஒட்டியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை எடுத்த கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழகம் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, நீதி, பொதுமக்கள் பாதுகாப்பில் ஆகியவற்றில் முதலிடம் பிடித்தது. இதனையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் சந்தித்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதற்காகவும், புத்தாண்டை ஒட்டியும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதேபோன்று, அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, ராஜலட்சுமி, வளர்மதி, மாஃபா பாண்டியராஜன், வெல்லமண்டி நடராஜன் மற்றும் தளவாய் சுந்தரம், முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஆகியோரும் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *