ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா?.. கொந்தளித்த யாஷிகா

சென்னை, செப்-18

நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம், தமிழ் சினிமாவில் பிரபலமானார். அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார்.
அதேபோல் இவர் நடித்த ஜாம்பி படத்தின் ஸ்னீக் பீக்குகள் இணையத்தில் வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் சிலர் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார்.

இது தொடர்பாக யாஷிகா ஆனந்த் தெரிவித்துள்ளதாவது, எனக்கு என்று சில தனித்துவம் இருக்கிறது. நான் மியா கலீபா கிடையாது. எனக்கும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. ஆனால் என்னை ஏன் அவருடன் ஒப்பிட்டு பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. எனக்கு என்று தனியாக சுயமரியாதை இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் சிலர் என்னை மிகவும் மோசமாக கிண்டல் செய்கிறார்கள். என்னை அப்படி சொல்பவர்கள் மீது எனக்கு கடும் கோபம் வருகிறது. இப்போதும் அவர்களை திட்டி வருகிறேன், நான் அதிகம் கஷ்டப்படுகிறேன். இப்படி சொன்னால் கஷ்டமாகத்தான் இருக்கும் என்று யாஷிகா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *