2019ல் உலக அளவிலான முக்கிய நிகழ்வுகள்

    டிசம்பர் 31

019ம் ஆண்டு உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் ஒரு பார்வை

நிலவின் தென் துருவப் பகுதியில்  தரைஇறங்கிய சீன ரோபோ விண்கலம்

சீனாவின் சாங்’இ-4 (chang’e 4 ) என்ற விண்கலம் நிலவின் தென் துருவப் பகுதியிலுள்ள ஐட்கென் படுகையில் பெய்ஜிங் நேரப்படி ஜனவரி 3ம் தேதி காலை 10.26 மணிக்கு தரையிறங்கியது.

 ஜனவரி 10, 2019  வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில்  முறைகேடுகள்  நடைபெற்றதாக புகார் எழுந்தன எதிர்க்கட்சிகளின்கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதிபராக பதவியேற்றார். நாடாளுமன்றத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எதிர்கட்சித் தலைவரும் சபாநாயகருமான ஜூவான் குவைடோ  தன்னை வெனிசுலாவின் இடைக்கால அதிபராக  பிரகடனம் செய்தார். இதனைத் தொடர்ந்து, அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளை தொடங்கியது.குவைடோவின் நடவடிக்கைக்கு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் பிரிட்டன் மற்றும் சில லத்தீன் அமெரிக்க நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஜனவரி 22 -மெக்சிகோவில் பெட்ரோல் குழாய் ஏற்பட்ட தீவிபத்தில் 91 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில்  கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர். இதில் 91 பேர் உடல் கருகி உயிரிழந்தனர், ஏராளமானோர் காயமுற்றனர்.

பிப்ரவரி 3 – ஐக்கிய அமீரகத்தில் போப் பிரான்சிஸ் வரலாற்று பயணம்

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பின் பேரில், கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க கூட்டத்தில் கலந்து  கொண்டார். அரண்மனைக்கு சென்ற போப் பிரான்சிஸ்  அரச குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது அவருக்கு அரண்மனை வாயிலில் துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற மத நல்லிணக்க கூட்டத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார். போப் பிரான்சிஸ் பங்கேற்ற மதநல்லிணக்க கூட்டத்தில் சுமார் 1,20,000 பேர் கலந்துகொண்டனர்.

பிப்ரவரி.17- ரூ.1400 கோடி ஊழல் வழக்கில்  நவாஸ் ஷெரிப்பின் சகோதரர் ஷாபாஸ் குற்றாவாளி என பாக் நீதிமன்றம் அறிவிப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவராகவும் பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார். ஷாபாஸ் ஷெரீப் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக  இருந்த போது, ஆசியானா வீட்டு வசதி திட்டத்தில், ரூ.1,400 கோடி ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் ஷாபாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டு லாகூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.இந்த நிலையில் ஊழல் வழக்கை விசாரித்த பொறுப்புடமை நீதிமன்றம் ஷாபாஸ் ஷெரீப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என அறிவித்தது.

மார்ச்சு.31 வெனிசுலா உள்நாட்டு விவகாரத்தில்  அமெரிக்காவின்  தலையீட்டுக்கு ரஷ்யா  சீனா எதிர்ப்பு

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவைடோக்கு அமெரிக்கா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு அளித்தன.

அதேநேரத்தில் அதிபர் மதுரோவுக்கு ரஷியா மற்றும் சீனாவும் ஆதரவு அளித்தன. ரஷியாவின் 2 ராணுவ விமானங்கள் கராகஸ் விமானநிலையத்துக்கு வெளியே ராணுவ வீரர்கள் மற்றும் ஆயுத தள வாடங்களுடன் ஒருவாரத்துக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷிய படைகள் உடனே வெளியேற வேண்டும் என வலியுறுத்தினார். எனினும் ரஷ்யா மதுரோவிற்கு ஆதரவாக நின்றது. அதேபோல் ரஷ்யாவுடன் மேலும் சில நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக அணி திரண்டது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடைகளை வரிசையாக விதித்தது. வெனிசுலாவை அவர்கள் போக்கில் விட வேண்டும். அமெரிக்கா தலையிட கூடாது என்று ரஷ்யா வலியுத்தியதால் இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

ஏப்ரல் 19 -ஈரானில் பருவநிலை மாற்றத்தால் கன மழை – வெள்ளப்பெருக்கு

பருவநிலை மாறுபாடுகளால் ஈரானில் ஒரு மாத காலமாக கன மழை கொட்டியது.  ஈரானின் வடகிழக்கு பகுதியில் தொடங்கிய மழை பாதிப்பு மார்ச் 25க்கு பின்னர் மேற்கு, தென்கிழக்கு என பரவத் தொடங்கியது.  ஏப்ரல்  1லிருந்து தென்கிழக்கு பகுதிகளில் கடும் மழை பெய்தது. இதனால்  ஏற்பட்ட வெள்ளத்தில் 15 மாகாணங்களில் 2,199 கிராமச் சாலைகளும் 84 பாலங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, 400க்கும் அதிகமான இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது,வெள்ளத்தில் சிக்கி 70 பேர் உயிரிழந்தனர்.ஏப்ரல் 15: பாரிஸ் நகரில்  850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் தீ விபத்தில் சேதமடைந்தது.

தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன.இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் தீ விபத்தில் இருந்து தப்பின.ஏப்ரல் 25: ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்திப்பு

வரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ரஷியாவுக்கு ரயிலில் புறப்பட்டு சென்ற கிம் ஜாங், பசிபிக் விளாடிவோஸ்டோக்கில் உள்ள ஹசன் ரெயில் நிலையத்தை சென்றடைந்தார். அங்கு அவருக்கு ரஷிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் இதனை அடுத்து விளாடிமர் புதினும், கிம் ஜாங் அன்னும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, வடகொரியாவின் நேர்மறையான முயற்சிகளுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று புதின் கிம் ஜாங் அன்னிடம் உறுதி அளித்தார்.

இலங்கையில் கிறிஸ்தவ தேவாலயங்கள் நட்சத்திர ஹோட்டல்கள் மீது தற்கொலை குண்டுத்தாக்குதல்

இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இதில் 259 பேர் கொல்லப்பட்ட நிலையில், 500-க்கும் மேலானோர் காயமடைந்தனர்.2009ம் ஆண்டு இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்து உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர் நடைபெற்ற மிக பெரிய தீவிரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது

தாய்லாந்து மன்னராக வஜ்ரலாங்கோர்ன் முடிசூடினார்

தாய்லாந்து மன்னராக மகா வஜ்ரலாங்கோர்ன் முடிசூடும் விழா மூன்று நாட்கள் நடைபெற்றன.நீண்டகாலம் ஆட்சி செய்த தந்தை பூமிபோன் அடூன்யடேட் 2016ம் ஆண்டு இறந்த பின்னர், 66 வயதாகும் அரசர் மகா வஜ்ராலங்கோர்ன் அரசமைப்பு சட்ட முடியாட்சியின் மன்னரானார்.

அக்டோபர்.22 : ஜப்பான் புதிய மன்னராக நருஹிட்டோ பதவி ஏற்றார்

ஜப்பான் நாட்டின் 125 வது மன்னர் அகிஹிட்டோ தனது முதுமை மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவரது மூத்த மகனான 59 வயது நருஹிட்டோ, ஜப்பானின் புதிய மன்னராக முடிசூடிக் கொண்டார். எளிய முறையில்  நடைபெற்ற விழாவில் ‘கிறிசாந்தமம்’ அரியணை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னருடன் அவரது மனைவி மசாக்கோ ராணியாக அரியணை ஏறினார். 

உலக கோப்பை முதன் முறையாக  வென்று இலங்கை கிரிக்கெட் அணி சாதனை

இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல்முறையாக இங்கிலாந்து அணி வென்றது.வரலாறு காணாத பரபரப்போடு நடைபெற்ற போட்டியில், கடைசி பந்தில் வெற்றி தோல்வியில்லாமல் சமநிலையில் முடிந்தது. பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக நடத்தப்பட்ட சூப்பர் ஓவர் போட்டியும் சமநிலையில் முடிந்தது.எனவே, ஆட்டத்திலும் சூப்பர் ஓவரிலும் அதிக பவுண்டரிகளை எடுத்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து அணிக்கு ஐசிசி உலகக் கோப்பை வழங்கப்பட்டது.

புவியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காட்டில் தீ

பிரேசில் நாட்டில் உள்ள  அமேசான் காட்டில் பற்றி எரிந்த தீ, ‘சர்வதேச நெருக்கடி’ என்று விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது.அந்த வார இறுதியில் நடைபெற்ற ஜி7 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனையானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *