வெளியானது தளபதி 64-ன் ஃபர்ஸ்ட் லுக்: படத்தின் பெயர் மாஸ்டர் (MASTER)

சென்னை, டிசம்பர்-31

நடிகர் விஜய் நடிக்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 64வது திரைப்படத்திற்கு ’மாஸ்டர்’ என பெயரிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அடுத்த படத்தில் நடித்து வருகிறார். கைதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும் படம் இது. சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் அப்டேட் கேட்டு கடந்த சில தினங்களாக விஜய் ரசிகர்கள் படக் குழுவினரை நச்சரித்து வந்தனர். இதைத் தொடர்ந்து டிசம்பர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக படக்குழுவினர் கடந்த 28-ம் தேதி அறிவித்தனர்.

உலகமே புத்தாண்டு கொண்டாடும் ஆர்வத்தில் இருக்க, விஜய் ரசிகர்கள் தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடும் உத்வேகத்தில் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக ட்விட்டரிலும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதை ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்த நிலையில், விஜய் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு மாஸ்டர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். எது எப்படியோ மாஸ்டர் கெத்தாக, மாஸாக இருக்கணும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுமட்டுமில்லாது, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதி பெயரும் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *