உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புத்தாண்டு வாழ்த்து!!!

சென்னை, டிசம்பர்-31

புத்தாண்டை முன்னிட்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் ஆகியோர் மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: வரவிருக்கும் 2020ஆம் ஆண்டில் உங்கள் கனவுகள் மெய்ப்படவும், உங்கள் வாழ்வில் நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் அனைத்து நல்ல செயல்களும் வெற்றி பெறவும் வேண்டி அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *