கொரியன் படத்தை காப்பியடித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்
நயன்தாராவின் 65 வது படமான ‘நெற்றிக்கண்’ 2011ம் ஆண்டு வெளிவந்த ஒரு கொரியன் படத்தின் காப்பி என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை, செப்-18
விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் நயன் தாரா நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு பூஜைபோடப்பட்டு படப்பிடிப்பும் துவங்கியுள்ளது. இப்படத்தலைப்பான நெற்றிக்கண்ணுக்கு முறைப்படி நயனும் விக்னேஷ் சிவனும் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமியிடம் நேரில் சென்று உரிமை பெற்றிருந்தனர். ‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் அடுத்ததாக நயன்தாராவை வைத்து ’நெற்றிக்கண்’ என்கிற திரில்லர் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். அவர் தயாரிக்கும் முதல் படம் இதுவாகும். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், நெற்றிக்கண் கதை 2011ல் வெளிவந்த ’ப்ளைண்ட்’என்ற படத்தின் அப்பட்டமான காப்பி என்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.