அடுத்த 4 நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தொடரும்!!!

சென்னை, டிசம்பர்-31

அடுத்த 4 நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை தொடரக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளார்களிடம் கூறியதாவது: 2019ல் வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் பதிவான மழை அளவு -454 மி.மீ.
இந்த காலகட்டத்தில் இயல்பு மழை அளவு – 447 மி.மீ.
இது இயல்பை விட 2 சதவீதம் அதிகம்.

கடந்த ஆண்டு மழை அளவு 24 சதவீதம் குறைவாக இருந்தது.
6 மாவட்டங்களில் இயல்பை விட அதிகம். 22 மாவட்டங்களில் இயல்பு ஒட்டி 5 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக மழை பதிவாகியுள்ளது. நீலகிரியில் 64 சதவீதம் இயல்பை விட அதிகமாகவும், பெரம்பலூரில் இயல்பை விட 28 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது.
ஆண்டளவில் (ஜன., முதல் டிச.,) காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரியில் 907 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.
அதே காலகட்டத்தில் இயல்பான அளவு 943 மி.மீ.,
ஆண்டளவில் இது இயல்பு அளவை விட 14 சதவீதம் குறைவு

வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் 8 புயல்கள் உருவாகியுள்ளன. வங்கக்கடலில் 3 புயல்களும், அரபிக்கடலில் 5 புயல்களும் உருவாகின. 2019ல் அரபிக்கடல் பகுதியில் வலுவான புயல்கள் தொடர்ந்து உருவாகின. கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நாகப்பட்டினம் கொள்ளிடத்தில் 9 செ.மீ., புதுச்சேரியில் 9 செ.மீ., சீர்காழியில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.அடுத்த 4 நாட்களுக்கு, தமிழகம், புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மழை தொடரக்கூடும். இதனால், வடகிழக்கு பருவமழை தொடரக்கூடிய நிலை நிலவுகிறது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *