மொழி, இன, மத, வன்மம், வாதம் தவிர்த்து வாழ்வோம் – பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி புத்தாண்டு வாழ்த்து

சென்னை, டிசம்பர்-31

புத்தாண்டு தினத்தையொட்டி மொழி, இன, மத, வன்மம், வாதம் ஆகியவற்றை தவிர்த்து மகிழ்ச்சியாக வாழ்வோம் என பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தன்னுடைய முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரபல தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: தடைகளாக இருந்தோரையெல்லாம் கண்ணிமை தவிர்த்து ஆண்டவன் அருளால் உங்கள் வாழ்வில் மருள் நீக்கி மணக்கண் திறந்தவர்கள் உங்கள் பயணங்களில் பாதைகளாக படிக்கற்களாக இருந்து மாற்றத்திற்கான உங்கள் வளர்ச்சியில் முன்னேற்றக் கதவுகளை திறந்தவர்கள் என்று இன்று நிறைவு பெறும் ஒரு நீண்ட நெடிய ஆண்டின் இறுதி நாளான இன்நன்நாளில் உங்களுக்கு நன்மை நல்கிய நல்லோரையெல்லாம் உங்கள் இதயத்திரையில் ஈரத்தோடு நினைத்துப் பாருங்கள்!!!

அதே படிநிலையில் பலருக்கு உதவியாக அந்த இறைவன் உங்களையும் அழகுறப் பயன்படுத்தியிருந்தால் அதற்கும் நன்றி சொல்லி அகமகிழங்கள்!. வரவிருக்கும் புத்தம் புதிய ஆண்டில் மொழி, இன, மத, வன்மம், வாதம் தவிர்த்து உடல் நலன் உள நலன் கெடுக்கும் எமபாதக எதிர்மறை மனநோய் எண்ணங்கள் கொண்டவர் எவராயினும் தவிர்த்து விடுங்கள்!.

எல்லா நலன்களும் பொருந்தி உங்கள் அனைவரது நேர்மறை எண்ணங்கள் எல்லாமும் ஈடேற அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி இன்று நள்ளிரவில் பிறக்கவிருக்கும் இராண்டாயிரத்து இருபதாம் ஆண்டினை வரவேற்று சமானியர் சான்றோர் சாதனையாளர் என ஆன்மீகம் அரசியல் ஊடகம் தொழில்முறை நட்பு சுற்றம் சூழம் சார்ந்தோர் அனைவருக்கும் இதயம் கனிந்த என் இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!. இவ்வாறு புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *