முப்படைகளின் தலைமை தளபதியாக நாளை பதவியேற்கிறார் பிபின் ராவத்

டெல்லி, டிசம்பர்-31

முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக பிபின் ராவத் புத்தாண்டு அன்று நாளை பதவியேற்கிறார்.

இந்தியாவின் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளுக்கும் சேர்ந்து ஒரே தலைமைத் தளபதி பதவியை உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் அனுமதி அளித்தது.  இந்நிலையில், தற்போது ராணுவ தலைமை தளபதியாக இருக்கும் பிபின் ராவத், இன்று பதவி ஓய்வு பெறுகிறார். இதனால் அவர் நான்கு நட்சத்திர அந்தஸ்து கொண்ட முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்படுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள தெரிவித்தன.

இந்நிலையில், முப்படையின் முதல் தலைமைத் தளபதியாக பிபின் ராவத்தை மத்திய அரசு அதிகாரபூர்வமாக நேற்று இரவு நியமித்துள்ளது. அவர், பாதுகாப்புப் படை முழுவதுக்குமான தலைவராக இருப்பார். மேலும், அணு ஆயுத தாக்குதல் தொடர்பாக உத்தரவிடும் அதிகாரிக்கான ஆலோசகராகவும் இவர் செயல்படுவார். இதற்கிடையே, ராணுவத்தில் தளபதி அதிகபட்சமாக ஓய்வு வயதையும் 65 ஆண்டுகளாக உயர்த்தி பாதுகாப்புத்துறை அமைச்சகம் விதிகளை மாற்றி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ராணுவ தளபதி பொறுப்பிலிருந்து இன்று பிபின் ராவத் ஒய்வு பெறுகிறார். இதையடுத்து, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பேசிய அவர் சவாலான சூழ்நிலையில் மன உறுதியுடன் நின்று போரிட்ட இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி கூறினார். இதனிடையே முப்படைகளின் தலைமை தளபதியாக புத்தாண்டு அன்று நாளை பிபின் ராவத் பதவியேற்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *