ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

சென்னை, டிசம்பர்-30

தமிழகத்தில் 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

கடந்த 27ம் தேதி நடைபெற்ற முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 156 ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 76.9 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில் இன்று 27 மாவட்டங்களிலும் மீதமுள்ள 158 ஊராட்சி ஒன்றியங்களில், காலை 7 மணிக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர். ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவியிடங்களுக்கு வாக்காளர்கள் தலா 4 வாக்குகளைச் செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *