சீரியல் நடிகரை 2வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா

பின்னணி பாடகியும், பிக்பாஸ் சீசன் 2வில் கலந்துக் கொண்டவருமான என்.எஸ்.கே.ரம்யா, சின்னத்திரை நடிகரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

சென்னை, செப்-18

பழம்பெரும் காமெடி நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் பேத்தியும், பிரபல பின்னணி பாடகியுமான எஸ்.எஸ்.கே.ரம்யா சீரியல் நடிகர் சத்யா என்பவரை நேற்று திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்தில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

தமிழ் மட்டும் இன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ள என்.எஸ்.கே.ரம்யா, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். ஏற்கனவே திருமணமான என்.எஸ்.கே ரம்யா, கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதை தொடர்ந்து தற்போது, சின்னத்திரையில் கதாநாயகனாக நடித்து வரும் சத்யா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருடைய திருமணத்தில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *