உத்தவ் மகன் ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சரவையில் இடம்!!!

மும்பை, டிசம்பர்-30

மராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகா விகாஸ் அகாதி என்ற தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கி கடந்த மாதம் 28-ந்தேதி ஆட்சி அமைத்தது. அப்போது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றுக்கொண்டதுடன், 3 கட்சிகளின் சார்பில் தலா 2 பேர் என 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

இந்த நிலையில், இன்று மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், என்.சி.பி. மூத்த தலைவர் அஜித்பவார் மீண்டும் துணை முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். மிகவும் வியப்புக்குரிய வகையில் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன், ஆதித்யா தாக்கரேவுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. தாக்கரே குடும்பத்தில் இருந்து முதல் முறையாக நேரடி அரசியல் களத்துக்குள் வந்த ஆதித்யா தாக்கரேவும் அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

கட்சியில் பல மூத்த தலைவர்கள் இருந்தும் முதன்முறையாக தேர்தலில் போட்டியிட்ட ஆதித்ய தாக்கரேவுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *