CAA, NRC ஐ எதிர்த்து மு.க.ஸ்டாலின், கனிமொழி வீட்டு வாசல்களில் மாக்கோலம்

சென்னை, டிசம்பர்-30

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெசண்ட் நகரில் கோலமிட்ட விவகாரத்தில் 7 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

கோலமிட்ட பெண்களை கைது செய்ததற்கு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சி.ஐ.டி. காலணியில் உள்ள திமுக கனிமொழி எம்பி வீட்டின் முன்பு  கோலம் போடப்பட்டுள்ளது

இதேபோன்று சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரது வீட்டு வாசல்களிலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோலமிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *