உள்ளாட்சி தேர்தலுக்கான 2-ம் கட்ட தேர்தல்: விறு விறு வாக்குப்பதிவு

சென்னை, டிசம்பர்-30

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதிதாக உருவாக்கப்பட்ட மற்றும் பிரிக்கப்பட்ட, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலுார், திருப்பத்துார், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து, மற்ற, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, 27 மாவட்டங்களில் உள்ள, 91 ஆயிரத்து, 975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு, இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட வாக்குப்பதிவு, 156 ஊராட்சி ஒன்றியங்களில், கடந்த 27ம் தேதி நடந்து முடிந்த நிலையில். இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. இன்று காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலை அமைதியாக நடத்த, 63 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஒன்பது மாவட்டங்களில் உள்ள, 30 ஓட்டுச் சாவடிகளில் நாளை மறு ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, பெரம்பலுார், புதுக்கோட்டை, தஞ்சாவூர், துாத்துக்குடி மாவட்டங்களில் பல ஓட்டுச் சாவடிகளில் குளறுபடிகள், வன்முறைச் சம்பவங்கள் நடந்ததால், நாளை (டிச.31 அன்று) ஒன்பது மாவட்டங்களில் 30 ஓட்டுச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *