3 நாட்களில் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை!!!

சென்னை, டிசம்பர்-28

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிய இன்னும் 3 நாட்கள்தான் உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், வடகிழக்கு பருவமழை காலம் டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிகிறது. கடல்காற்று ஜனவரி முதல் வாரம் வரை நீடித்தாலும், 31-ந்தேதி வரைதான் பருவமழை கணக்கிடப்படும். ஜனவரி 10-ந்தேதி முதல் மழை பெய்தால் குளிர்கால மழையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தமிழகத்தில் வட மாவட்டங்களைவிட தென் மாவட்டங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளதாக அவர் கூறினார். சென்னையில் 17 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *