ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு வீராங்கனை மேரி கோம் தேர்வு!!!

டெல்லி, டிசம்பர்-28

2020 ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டிக்கு இந்தியா சார்பில் விளையாட மேரி கோம் தகுதி பெற்றார்.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மணிப்பூரின் மேரி கோம் (36). உலக சாம்பியன்ஷிப்பில் 6 தங்கம் உட்பட 8 பதக்கம் வென்றவர். இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் தலைவா் அஜய் சிங், அடுத்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு மேரி கோம் நேரடியாக தோ்வு செய்யப்பட்டதாக அறிவித்தாா்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காக 48 கி பிரிவில் இருந்து 51 கி எடைப்பிரிவுக்கு மாறினார். ஆனால் 51 கி.கி., பிரிவில் ஏற்கனவே சாதித்து வரும் தெலுங்கானா வீராங்கனை நிகாத் ஜரீன் (23) எதிர்ப்பு தெரிவித்தார்.

தனக்கும், மேரி கோமுக்கும் இடையே போட்டி வைத்து, அதில் வெல்பவரை ஒலிம்பிக் தகுதிச்சுற்றுக்கு அனுப்ப வேண்டும் என, கடந்த ஐந்து மாதமாக போராடினார். ஒலிம்பிக் தகுதிச்சுற்று போட்டிகள் சீனாவில் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. இதற்கு இன்று விடை கிடைத்தள்ளது. டெல்லியில் நடக்கும் குத்துச்சண்டை தேர்வு முகாமில் நேற்று பல பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 51 கி.கி., எடைப்பிரிவில் மேரி கோம், சக வீராங்கனை ரிது கிரேவலை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.

இதையடுத்து இறுதி போட்டியில், 9-1 என்ற புள்ளிக்கணக்கில் நிகாத் ஜரீனை வீழ்த்தி மேரி கோம் வெற்றிப் பெற்றார். 51 கிலோ எடைப் பிரிவில் 9-1 என்ற புள்ளிக்கணக்கில் மேரி கோம் வெற்றிப் பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *