காங்கிரஸ் 135வது ஆண்டு தொடக்கம் : கட்சி கொடியேற்றி சோனியா கொண்டாட்டம்

டெல்லி.டிசம்பர்.28

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் 135 வது ஆண்டு தினத்தை, அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்,டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் காங்கிரஸ் அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் 135-வது நிறுவன தினம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றி வைத்தார். இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மூத்த தலைவர் மோதிலால் வோரா உள்ளிட்ட தலைவர்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். பின்னர் கட்சியினர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர், தொடர்ந்து தொண்டர்களுக்கும், குழந்தைகளுக்கும் சோனியா காந்தி இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார் .

அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். 

உத்தரப்பிரதேச உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற கொண்டாட்டத்தில் பிரியங்காகாந்தி  கலந்து கொண்டார்.  


கேரளாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் தொடக்க நாள் கொண்டாடப்பட்டது.


இதேபோல் தமிழகத்தில்   காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்திய மூர்த்தி பவனில்  நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில  தலைவர் கே.எஸ்.அழகிரி கொடியேற்றிவைத்து இனிப்புகளை வழங்கினார்.

இதுதவிர நாட்டின் பல்வேறு பகுதியில் இன்று காங்கிரஸ் சார்பில் அமைதிப்பேரணி நடத்தப்பட்டு வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி இந்த பேரணிகள் நடத்தப்படுகின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *