என்.ஆர்.சி., என்.பி.ஆர். மிகவும் பேராபத்து வாய்ந்தவை-ராகுல் காந்தி

டெல்லி, டிசம்பர்-28

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.,) மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவை, பணமதிப்பிழப்பை விட பேராபத்து வாய்ந்தவை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி துவக்கப்பட்டதன் 135வது ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை சோனியா ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராகுல் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் ராகுல் கூறுகையில்; என்பிஆர் மற்றும் என்ஆர்சியின் அடிப்படை நோக்கம், ஏழை மக்களிடம் நீங்கள் இந்தியரா இல்லையா என்பது. பிரதமரின் 15 நண்பர்கள் எந்த ஆவணத்தையும் காட்ட மாட்டார்கள். அரசுக்கு கிடைக்கும் வருவாய், இவர்களின் பாக்கெட்களுக்குள் சென்றுவிடும். பணக்காரர்களுக்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ரூபாய் நோட்டு வாபசை விட, என்பிஆர் மற்றும் என்ஆர்சி பேராபத்து வாய்ந்தவை. ரூபாய்நோட்டு வாபஸ் ஏற்படுத்திய பாதிப்பை விட இரு மடங்கு பாதிப்பு ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே நேற்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் நிருபர்களிடம் கூறுகையில், ராகுல், அனைத்து நேரங்களிலும் பொய் பேசுவார். இந்த ஆண்டின் சிறந்த பொய்யர் என்ற விருது இருந்தால் அதனை, பெறுபவராக ராகுல் இருப்பார் என தெரிவித்தார்.

இது தொடர்பாக ராகுல் கூறுகையில், நாட்டில் எந்த தடுப்புக்காவல் முகாம்களும் அமைக்கப்படவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருந்த வீடியோவை நான் டுவிட்டரில் பகிர்ந்து இருந்தேன். ஆனால், அந்த வீடியோவில் தடுப்பு முகாம்கள் இருப்பது பற்றிய காட்சிகள் இடம்பெற்றிருந்தன. எனவே யார் பொய் சொல்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *