டெல்லியில் கடுங்குளிர்- 100 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்த தட்பவெப்பம்

 டெல்லி.டிசம்பர்.28

 டெல்லியில் நிலவும் வரலாறு காணாத கடுங் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில், கடந்த சில வாரங்களாக குளிர் கடுமையாக வாட்டி வதைக்கிறது. பல்வேறு இடங்களில் பனி மூட்டமாகவே காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் தட்பவெப்பநிலை மிகவும் குறைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

டிசம்பர் மாதத்தில் டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 19.5 டிகிரியாக உள்ளது. 1901-ம் ஆண்டு அதிகபட்ச வெப்பநிலையாக 17.3 என பதிவாகி இருந்தது. நேற்று 4.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குறைந்தது. அதிகபட்ச வெப்பநிலை 13.4 டிகிரியாக இருந்தது. இந்த கடுமையான குளிரால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளானார்கள். 

இன்று அதைவிட கடுமையான குளிர் வாட்டியது. காலை 2.4 டிகிரி செல்சியசாக வெப்பநிலை குறைந்தது. இதுவே இந்த சீசனில் மிக குறைந்த வெப்பநிலை ஆகும். இன்று பார்வை தூரமும் மிகவும் குறைந்தது. 150 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்களை பார்க்க முடியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *