இந்தியா பின்னோக்கி செல்கிறது-ராகுல் காந்தி

ராய்ப்பூர், டிசம்பர்-27

இந்தியா அனைத்து விதத்திலும் பின்னோக்கி செல்வதை உலகம் கண்டுகொண்டிருக்கிறது என காங்., எம்.பி. ராகுல் குற்றம்சாட்டி உள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் ராஷ்டிரிய ஆதிவாசி நிர்தியா மகோற்சவ துவக்க விழாவில் ராகுல் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அவர், அனைத்து மதங்கள், சாதிகளை சேர்ந்த மக்கள் இல்லாமல் இந்திய பொருளாதாரத்தை கொண்டு செல்ல முடியாது. அனைத்து இந்தியனின் குரல் லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில் கேட்கப்படும் வரை வேலைவாய்ப்பின்மை, மாநில பொருளாதாரம் ஆகியவற்றை சரிசெய்ய ஒன்றும் செய்ய முடியாது, என்றார்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், வளர்ச்சியில் இந்தியாவும் சீனாவும் ஒரே பாதையில் சென்று கொண்டிருந்ததை இதற்கு முன் உலகம் கண்டது. ஆனால் தற்போது இந்தியாவில் வன்முறை, பெண்கள் தெருக்களில் செல்ல பாதுகாப்பில்லாமல் உணருவது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது ஆகியவற்றை உலகம் பார்க்கிறது. அனைத்து துறைகளிலும் இந்தியா பின்னோக்கி செல்கிறது, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *