கோவை சிறுமி பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

கோவை, டிசம்பர்-27

கோவை துடியலூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டை வழங்கி போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் 7 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கை விசாரித்த போலீசார் சிறுமியின் வீட்டெதிரே வசித்து வந்த சந்தோஷ்குமார் என்பவரை கைது செய்தனர். பின்னர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ராதிகா முன்னிலையில் வழக்கு தொடர்பான தடயவியல் அறிக்கை நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் சிறுமியை சந்தோஷ்குமாரும் மற்றொருவரும் பாலியல் வன்புணர்வு செய்தது உறுதியானது. இதையடுத்து சந்தோஷ்குமாரை குற்றவாளியாக அறிவித்த நீதிபதி ராதிகா அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் உள்ள மற்றொருவரின் விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *