உள்ளாட்சித் தேர்தல் : முதல்வர் பழனிசாமி சொந்த ஊரில் வாக்களித்தார்

சேலம்.டிசம்பர்.27

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் நெடுங்குளம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் நெடுங்குளம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில்  வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்

. அவருடன் மனைவி, மகன் மற்றும் மருமகளும் வாக்களித்தனர்.  நெடுங்குளம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அதிமுகவைச் சேர்ந்த மாதேஸ்வரன் ‘கை உருளை’  சின்னத்திலும் திமுகவைச் சேர்ந்த விஸ்வநாதன் ‘பூட்டு சாவி’ சின்னத்திலும் பழனிச்சாமி என்பவர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர் .

மேலும்,  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு இரட்டை இலை சின்னத்தில் நடராஜனும், உதயசூரியன் சின்னத்தில் திருமூர்த்தியும் போட்டியிடுகின்றனர,.

மேலும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு அதிமுகவைச் சேர்ந்த சாந்தாமணி ராஜாவும், திமுகவைச் சேர்ந்த சந்திரா ரவி குமரனும்  நாம் தமிழர்  கட்சியின் நித்திய பாலமலையும்  போட்டியிடுகின்றனர் . நெடுங்குளம் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 9 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *