குடியுரிமை சட்டம் பற்றி எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்-அமித்ஷா குற்றச்சாட்டு

டெல்லி, டிசம்பர்-26

குடியுரிமைச் சட்டத்தை பற்றி எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்தி குழப்பத்தை ஏற்படுத்துகின்றன என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது. இந்த சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்களில், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. உ.பி.யில் நடந்த போராட்டத்தின்போது பெரும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. இந்தநிலையில் டெல்லியில் டெல்லி வளர்ச்சி வாரியத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது: ‘‘காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் குடியுரிமைச் சட்ட விவகாரத்தில் வேண்டுமென்றே மக்களை தவறாக வழிநடத்துகின்றன. குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. டெல்லியில் அமைதியான சூழலை கெடுக்கும் வேலையை எதிர்க்கட்சிகள் செய்கின்றன.

இதனால் டெல்லியில் அமைதியான சூழல் கெடுகிறது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு மக்கள் தோல்வியை பரிசாக வழங்குவார்கள். டெல்லியில் பாஜக ஆட்சியமைக்கும்’’ எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *