ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு

ராஞ்சி, டிசம்பர்-26

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்கும் விழாவிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜ.வை தோற்கடித்து காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கூட்டணியின் தலைமைக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் மாநில முதல்வராக பொறுப்பேற்கிறார். பதவியேற்பு விழா வரும் 29ம் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கு ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று டெல்லி வந்த அவர் சோனியா காந்தியை அவரது இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். சோனியாவுடனான சந்திப்பில் ராகுலும் இருந்தார். அவருக்கும் ஹேமந்த் சோரன் அழைப்பு விடுத்தார். இதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்திக்க ஹேமந்த் சோரன் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், பதவியேற்பு விழாவில் பங்கேற்க திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *