NRC பற்றி மோடியும், அமித்ஷாவும் மாறுபட்ட கருத்துக்களை கூறுவது வேடிக்கை-திருமா

சென்னை, டிசம்பர்-26

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடத்திய வழக்கில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 7 தலைவர்கள் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பிருந்த நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசியதாவது: இந்த வழக்கு எங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கு இந்த பொய் வழக்கை நாங்கள் முறியடிப்போம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறியது நாட்டு மக்களின் நலனுக்காக… தனிப்பட்ட நபர்களுக்காக அல்ல…

சென்னையில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது திருமாவளவன் பேச்சு

குடியுரிமை சட்டம் எதிர்த்து நடத்திய போராட்டத்தில் எங்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தான் பார்த்தோம். அது தொடர்பான எந்த தகவல்களும் முறைப்படி காவல்துறையினரால் எங்களுக்கு அறிவிக்கப்படவில்லை. அந்த வழக்கு உறுதி படுத்தபட்டால் அதையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

அமித்ஷாவும், மோடியும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு வெவ்வேறு கருத்துகளை ஒரே அமைச்சரவையில் இருந்து கொண்டு கூறுவது வேடிக்கையாக உள்ளது. NRC யை பற்றி ஆளுக்கொரு கருத்தை கூறுவது, கூட்டணி கட்சியில் இருக்கும் அதிமுகவும் மாறுபட்ட கருத்தை கூறுவது மக்களை குழுப்புவதற்காக, போராட்டத்தை திசை திருப்புவதற்காக கையாலுகின்ற யுக்தி என்று கருதுகிறேன்.

ஜனநாயக சக்திகள் விழிப்பாக இருக்க வேண்டும். இந்த அறவழி போராட்டத்தை தொடர் வழி போராட்டமாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *