என்னைப் பற்றிய மீம்ஸை வரவேற்கிறேன், சந்தோஷமாக இருங்கள்-மோடி

டெல்லி, டிசம்பர்-26

தன்னை பற்றிய புகைப்படம் மீம்ஸாக வெளிவரும் என டுவிட்டரில் ஒருவர் கூறியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அதனை வரவேற்பதாகவும், மகிழ்ச்சியாக இருங்கள் எனவும் கூறியுள்ளார்.

சூரிய கிரகணம் தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில், நாட்டு மக்களை போல், சூரிய கிரகணத்தை பார்க்க நானும் ஆர்வமாக இருந்தேன். எதிர்பாராதவிதமாக, மேகமூட்டம் காரணமாக சூரியனை பார்க்க முடியவில்லை. ஆனால், கோழிக்கோடு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் தெரிந்த சூரிய கிரகணத்தை நேரலையில் பார்த்தேன். நிபுணர்களுடன் கலந்துரையாடி, சூரிய கிரகணம் பற்றி மேலும் தெரிந்து கொண்டேன் எனக்கூறியிருந்தார்.

இந்த ட்விட்டுடன், சூரிய கிரகணத்தை பார்ப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டார். கறுப்பு கண்ணாடியுடன் இருப்பது போன்ற அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவ துவங்கியது.

இதையடுத்து, இந்த புகைப்படம் மீம்ஸாக வலம் வருகிறது என ட்விட்டரில் ஒருவர் கருத்து பதிவிட்டிருந்தார். இதனையடுத்து, இந்த புகைப்படத்திற்கு மேற்கோள் காட்டி, ட்விட்டரில் மோடி கூறுகையில், மீம்சை மிகவும் வரவேற்கிறேன். மகிழ்ச்சியாக இருங்கள் எனக்கூறியுள்ளார்

பிரதமர் மோடியின் இந்த பதில் பெரும்பான்மையானவரை கவர்ந்துள்ளது. இதனை பெரும்பாலானவர்கள் ”Coolest PM” என்ற ஹேஷ்டேக்கில் பாராட்டி வருகின்றனர். இதனையடுத்து அந்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *