130 கோடி இந்தியரும் இந்துக்களே: ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்

ஐதராபாத், டிசம்பர்-26

தாங்கள் சார்ந்த மதம் மற்றும் கலாச்சாரத்தை பொருட்படுத்தாமல் 130 கோடி இந்தியர்களையும் இந்துக்களாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது என அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் நடக்கும் 3 நாட்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மோகன் பகவத் கூறுகையில், ஆர்எஸ்எஸ் ஒருவரை இந்து என்கிறது என்றால், அவர்கள் இந்தியாவை தாய்நாடாக கருதுபவர்கள். அவர் இந்திய தாயின் மகன். அவர்கள் என்ன மொழி பேசுகிறார்கள், எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள், எந்த முறையில் வழிபாடு நடத்துகிறார்கள் என்பதை பொருட்படுத்துவதில்லை.
அவர்களை இந்துவாகவே ஆர்எஸ்எஸ் கருதுகிறது.

ஆர்எஸ்எஸ்.ஐ பொருத்தவரை 130 கோடி இந்திய மக்களும் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அவரவராக இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ் நோக்கம்.

நாங்கள் இந்துத்துவாதி என மக்கள் கருதுகிறார்கள். ஆர்எஸ்எஸ் நாட்டிற்காக பணியாற்றுகிறது. தர்மம் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறார்கள். கவிஞர் ரவீந்திரநாத் கூறியது போன்று, வெறும் அரசியலால் மட்டும் நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. மக்களால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். வேற்றுமையில் ஒற்றுமை என்பார்கள். நமது நாடு அதன்படி நடக்கிறது. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல, வேறுபட்டவர்களையும் ஒன்றிணைத்து சாதனை படைத்துள்ளோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *