50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை அதிமுக கொடுத்துள்ளது: அமைச்சர் S.P.வேலுமணி

கோவை, டிசம்பர்-24

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில், 50 ஆண்டுகளில் காணாத வளர்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளது என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி. வேலுமணி, ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆசியுடன் தமிழக உள்ளாட்சித்துறை 99 விருதுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழக உள்ளாட்சித்துறை ஒரு சாதனை படைத்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம், சாலை பாதுகாப்பு, குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

தமிழகத்தில் இந்தப் பருவமழைக் காலத்தில் மழை அதிகளவில் பெய்து நீர்நிலைகள் நிரம்பி நல்ல நிலையில் உள்ளது. மக்களுக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் ஆதரவு அதிமுகவுக்கு உள்ளது என்றும் கூறினார். குடியுரிமை திருத்த சட்டத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது.  குடியுரிமை சட்டத்தால் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினருக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது.

இஸ்லாமியர்களுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும், அவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம். எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *