மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்: பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்

சென்னை, டிசம்பர்-24

தந்தை பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவதையொட்டி தமிழக பா.ஜ.க. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பெரியாரை விமர்சித்து கருத்துகளை பதிவிட்டுருந்தது. இதற்கு பெரும்பாலனோர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சமூக சிந்தனைக்காக வாழ்ந்த பெரியாரின் வாழ்க்கையை யார் கொச்சைப்படுத்தினாலும் அது தவறுதான் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பின்னர், பா.ஜ.க. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இருந்து பெரியார் குறித்த சர்ச்சை பதிவை நீக்கியது.

இந்த நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், பெரியாரை இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் பா.ஜ.க. நீக்கியுள்ளது. அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா? என கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *