திமுகவுக்கு அதிர்ச்சி.. எம்.பி.ஜெகத்ரட்சகனுக்கு சிபிசிஐடி சம்மன்

நில மோசடி புகார் தொடர்பாக வரும் 23 ம் தேதி ஆஜராக ஜெகத்ரட்சகன் எம்.பி.க்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஜெகத்ரட்சகன் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை, செப்-17

சென்னை குரோம்பேட்டையில் தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான 1.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய உறவினர்கள் 47 பேருக்கு சட்டவிரோதமாக திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் பிரித்துக் கொடுத்ததாகவும், அந்த இடம் ஒதுக்கீடு சம்மந்தமாக நகர்ப்புற நில உச்சவரம்பு என எந்த விதியையும் பின்பற்றவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தவிட்டது. இந்த உத்தரவையடுத்து வருகின்ற 23-ஆம் தேதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் எழும்பூரில் இருக்கும் சிபிசிஐடி தலைமை அலுவலத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது திமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *