5,000 பேர் மட்டுமே பேரணியில் கலந்துகொண்டது திமுகவுக்கு கேவலம்-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை, டிசம்பர்-24

எம்.ஜி.ஆர். நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை வண்ணாரப்பேட்டையில் அமைச்சர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர். உருவ படத்திற்கு கற்பூறம் ஏற்றி ஆராதனை செய்து, மலர் தூவி மதியாதை செலுத்தினார்.

தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது: எம்.ஜி.ஆர். மறைந்து 32 ஆண்டுகள் ஆனாலும் அவரின் புகழ் இன்றும் குறையவில்லை. எம்.ஜி.ஆரின் கருத்துகள் இன்னும் 100 ஆண்டுகள் நீடிக்கும். நாங்கள் எல்லாம் இன்று வீரத்தோடு இருப்பதற்கு காரணம் எம்.ஜி.ஆர். தான்.

திமுக நடத்திய பேரணிக்கு 108 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும் 5000 பேருக்கு மேல் கூட்டம் கூடவில்லை. காவல்துறையினரின் கூட்டத்தைவிட திமுகவின் பேரணிக்கு வந்தவர்கள் கூட்டம் குறைவு. மிகப்பெரிய அளவில் பேரணிக்கு கூட்டம் வரும் என எதிர்பார்த்தார்கள்.

சாதி, மத, பேதம் இல்லை என தமிழக மக்கள் திமுகவிற்கு உணர்த்தியுள்ளனர். தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் திமுக பேரணியில் வன்முறை ஏற்படவில்லை. குடியுரிமை சட்டத்திருத்ததை எதிர்த்து அடுத்தக்கட்டமாக ஸ்டாலின் ஐ.நா. சபையில் முறையிட போகிறாரா? 5000 பேர் மட்டுமே பேரணியில் கலந்துகொண்டது திமுகவிற்கு மிகப்பெரிய கேவலம்.

க வலைத்தளங்களில், தந்தை பெரியார் குறித்து பாஜக சார்பில் விமர்சிக்கப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், சமூக சிந்தனைக்காக வாழ்ந்த பெரியாரின் வாழ்க்கையை யார் கொச்சைப்படுத்தினாலும் அது தவறுதான் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *