ஜன.6-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை-அதிகாரப்பூரவ அறிவிப்பு

சென்னை, டிசம்பர்-24

தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற ஜனவரி 6-ந்தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2020-ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், 6-ந்தேதி நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார்.

இது குறித்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டசபை கூட்டம் ஜனவரி 6-ம் தேதி கூடுகிறது.  ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது.  கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து 6-ம் தேதி நடைபெறவிருக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *