எம்.ஜி.ஆர். நினைவுதினம்: ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். மரியாதை!!!

சென்னை, டிசம்பர்-24

எம்ஜிஆரின் 32வது நினைவுநாளையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் எம்ஜிஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க, அதனை இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி உள்ளிட்டோர் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். உறுதிமொழியில், ‘தனிப்பட்ட குடும்பத்தின் ஆதிக்கம் தலைதூக்குவதை தடுப்போம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காலை முதலே ஏராளமான அதிமுகவினரும், பொதுமக்களும் எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *