ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள்: மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம்-அமித்ஷா

டெல்லி, டிசம்பர்-23

ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்களின் தீர்ப்பை மதிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இங்கு ஆட்சி அமைப்பதற்கு மொத்தம் 42 இடங்கள் தேவை. இந்நிலையில், ஜெஎம்எம் – காங்கிரஸ் – ராஷ்டிர ஜனதா தளம் (ஆர்ஜேடேி) கூட்டணி 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம், அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதில், ஜெஎம்எம் 29 இடங்களிலும், காங்கிரஸ் 14 இடங்களிலும், ஆர்ஜேடி 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. பாஜக 24 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. எனவே, 29 இடங்களில் முன்னிலை வகித்து வரும் ஜெஎம்எம் அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநில தேர்தல் முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து பதிவிட்டுள்ளதாவது: மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம், கடந்த 5 ஆண்டுகளாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. சேவை செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி. தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சிக்கு பா.ஜ.க. பாடுபடும் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *