தமிழகம் முழுவதும் தந்தை பெரியாரின் 141வது பிறந்தநாள் கொண்டாட்டம்

தமிழகம் முழுவதும் பெரியாரின் 141வது பிறந்தநாள் விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சென்னை, செப்-17

தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் அவருடைய திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு இடங்களில் இருக்கக்கூடிய பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், அவர் திருவுருவ படத்துக்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தப்படுகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு தமிழக முதல்வர் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேலும் அமைச்சர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, அதுபோல எம்.பி.சம்பத், உள்ளிட்டஅனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பெரியாரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நடைபெற்று வரும் நிகழச்சியில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், உள்ளூரில் இருக்கக்கூடிய எம்எல்ஏக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தி வருகின்றன.

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சிம்சன் பெரியார் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். சென்னை அண்ணாசாலை சிம்சன் சிக்னல் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்ட பெரியார் உருவப்படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களும் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தயாநிதி மாறன், ஆர்.எஸ்.பாரதி, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *