குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் சத்தியகிரக போராட்டம்

டெல்லி, டிசம்பர்-23

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவருமான சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், கமல் நாத், அகமது படேல், ஆனந்த் ஷர்மா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். 

தொடர்ந்து போராட்டத்தின் இடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்தார். அதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் மற்றும் ராகுல்காந்தியும் வாசித்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *