தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!!!

டெல்லி, டிசம்பர்-23

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற 66வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு விருதுகளை வழங்கினார். இதில் சிறந்த நடிகைக்கான விருதை “மகாநடி” படத்துக்காக கீர்த்தி சுரேஷ் பெற்றார். 

விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருதை “உரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்” திரைப்படத்தை இயக்கிய ஆதித்யா தார் பெற்றுக்கொண்டார். உரியில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் படம் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதையும் தட்டி சென்றது.

சிறந்த நடிகருக்கான விருதை “அந்தாதுன்” என்ற இந்திப் படத்தில் நடித்த ஆயுஷ்மான் குர்ரானாவும் “உரி தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்” படத்தில் நடித்த விக்கி கௌஷலும் கூட்டாக பெற்றுக்கொண்டனர். சிறந்த நடிகைக்கான விருது நடிகை சாவித்ரி வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட “மகாநடி” படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ் படத்துக்கான விருதை பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிய பாரம் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திரைப்படத்துக்கான விருதை விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் இயக்கிய “ஜிடி நாயுடு – தி எடிசன் ஆஃப் இந்தியா” திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது.

பத்மாவத், கே.ஜி.எஃப், உரி உள்ளிட்ட திரைப்படங்கள் கணிசமான விருதுகளை தட்டிச் சென்றன. பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு திரைத்துறையில் அவரது சாதனையை கவுரவிக்கும் விதமாக தாதாசாகேப் பால்கே விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் இன்று நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு அமிதாப் பச்சனுக்கு அவ்விருதை வழங்கவிருந்தார்.

இந்நிலையில் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பயணம் மேற்கொள்ள முடியாத சூழலில் தான் உள்ளதாக தெரிவித்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், விழாவில் தான் கலந்துகொள்ள முடியாமைக்காக வருத்தமும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *