6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!!!

சென்னை, டிசம்பர்-23

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

மேலும், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழகம், புதுவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறிய அவர் குமரிக்கடல் பகுதியில் புயல் காற்று மணிக்கு 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு குமரிக் கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *