சுயேட்சை வேட்பாளரிடம் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்க்கண்ட் முதல்வர் தோல்வி

ராஞ்சி, டிசம்பர்-23

81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு, நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஜெம்ஷெட்பூர் கிழக்குத் தொகுதியில் அம்மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ரகுபர் தாஸ் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் பாஜக அமைச்சரும், சுயேட்சை வேட்பாளருமான சரயு ராயை விட 4,643 வாக்குகள் பின்னடைவைச் சந்தித்துள்ளார் ரகுபர் தாஸ். இத்தொகுதியில் கடந்த 1995-ஆம் ஆண்டு முதல் ரகுபர் தாஸ் தொடர்ந்து வெற்றிபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, முன்னிலை நிலவரங்கள் மட்டுமே வந்துள்ளன. எனவே இதனை இறுதி முடிவாக ஏற்க முடியாது. வெற்றி நிலவரத்தை இப்போதே கணிப்பது சரியாக இருக்காது. இந்தப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைப்பது உறுதி என்று ரகுபர் தாஸ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *