பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்த மோடி

குஜராத் மாநிலத்தில் உள்ள சர்தார் சரோவர் அணை பகுதியில் பிரதமர் மோடி இன்று பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு மகிழ்ந்தார்.

ஆமதாபாத், செப்-17

பிரதமர் மோடி இன்று தனது 69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, தனது சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெற்றார்.
இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்றார். இந்த ஆண்டு நல்ல மழை பெய்ததால், குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து நர்மதா நதியின் சர்தார் சரோவர் அணையை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

மேலும்,அங்கு இருந்த ‘Statue of Unity’ சர்தார் வல்லபாய் படேல் உருவ சிலையை பார்வையிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி, நர்மதா மாவட்டத்தில் உள்ள கல்வானி சுற்றுச்சூழல் பகுதியினை பார்வையிட்டார். இதனையடுத்து நர்மதா மாவட்டம், கேவடியாவில் உள்ள ஜங்கிள் சபாரி சுற்றுலா பூங்காவில் மின் வாகனத்தில் பயணம் செய்து விலங்குகளை பார்வையிட்டார்.
பின்னர் சர்தார் சரோவர் அணை பகுதியில் இருந்த பட்டாம்பூச்சி பூங்காவில் பல வண்ண பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு பிரதமர் மோடி மகிழ்ந்தார்.

தொடர்ந்து, குருதேஸ்வர் கோவில், குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்காவிற்கு செல்ல உள்ள மோடி, பொது கூட்டம் ஒன்றிலும் உரையாற்ற உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *