தெலுங்கானா என்கவுன்டர்: 4 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவு

ஹைதராபாத், டிசம்பர்-21

பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களை மறு பிரேதப் பரிசோதணை செய்ய தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 27 வயதான கால்நடை பெண் மருத்துவர், பணி முடிந்து இரவு வீடு திரும்பிய போது, மர்மநபர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஷம்ஷாபாத் அருகே எரித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது ஆரிஃப், நவீன், சிவா, சென்னக்கேசவலு ஆகிய 4 பேரும் போலீசாரால் என்கவுன்டரில் கடந்த 6ஆம் தேதி அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காந்தி அரசு மருத்துவமனையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

என்கவுன்டர் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு தெலங்கானா மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணையமும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், காவல் அதிகாரிகளின் சிறப்பு குழு ஒன்றை தெலங்கானா அரசும் அமைத்துள்ளது.

இந்நிலையில், பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் என்கவுன்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நான்கு பேரின் உடல்களை மறு பிரேதப் பரிசோதணை செய்ய தெலங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *