மாநில அளவிலான கபடி போட்டி: ஜன.25-ல் தொடக்கம்

சென்னை, டிசம்பர்-21

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான கபடி போட்டி ஜனவரி மாதம் 25-ம் தேதி மதுரையில் தொடங்குகிறது.

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி அசோசியேசனுடன் இணைந்து நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டி வருகிற ஜனவரி மாதம் தொடங்குகிறது.  இந்த போட்டியில் 32 வருவாய் மாவட்டங்களில் உள்ள 32 பெண்கள் அணி, 32 ஆண்கள் அணி என மொத்தம் 64 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியிலும் 12 வீரர்கள் வீதம் ஆண்கள் அணியில் 384 வீரர்களும், பெண்கள் அணியில் 384 வீராங்கனைகளும் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்த போட்டியின் முதல் தொடர்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களிலும், மேலும், லீக், காலிறுதி, அரையிறுதி சுற்றுகள் சென்னையில் 7 நாட்கள் நடைபெறவுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *