இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை இல்லை?-சரத்பவார் கேள்வி

டெல்லி, டிசம்பர்-21

இந்தியாவில் குடியேறியிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் குடியுரிமை மறுக்கப்படுவது ஏன் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கூறியதாவது: ‘‘பொருளாதார மந்தம் உட்பட நாட்டில் பல முக்கிய பிரச்சினைகள் உள்ளன. இதனை திசை திருப்பும் வகையில் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் இந்த நாட்டின் நலனை விரும்பும், ஒற்றுமையை விரும்பும் எவரும் குடியுரிமைச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்க முடியாது.

குடியுரிமைச் சட்டம் நாட்டின் ஒற்றுமையை அழித்து, மதம், மொழி, இனம் என நாட்டை பிளவுபடுத்தும் செயல் இதனை ஏற்க முடியாது. வெளிநாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வரும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அப்படி என்றால் இலங்கையில் இருந்து வரும் தமிழர்களுக்கு ஏன் தரக்கூடாது.’’ எனக் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *