இந்திய குடியுரிமைக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை!!!

சென்னை, டிசம்பர்-21

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) ஐ நாடு முழுவதும் அமல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. என்.ஆர்.சி. அமல்படுத்தப்படும் பட்சத்தில் உங்கள் பூர்வீஅம் இந்தியாவா என்பதை நிரூபிக்க உங்களிடம் என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை பார்க்கலாம்.

என்னென்ன ஆவணங்கள் தேவை!!!

 • என்.ஆர்.சி நடவடிக்கையின்போது, இந்திய குடிமக்கள் என்பதை உறுதி செய்ய பிறந்த தேதி, பிறந்த இடம் தொடர்பான எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யலாம்
 • பிறந்த தேதிக்கான ஆவணங்கள் இல்லாதோர் அவர்களது பெற்றோர்கள் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் ஆவணங்களை தாக்கல் செய்யவேண்டும்
 • பெற்றோர் அல்லது அவர்களின் தாய் தந்தையரின் பிறந்த தேதியை உறுதிப்படுத்தும் 1971-ம் ஆண்டுக்கு முந்தைய ஆவணங்கள் எதையும் தாக்கல் செய்யவேண்டிய அவசியமில்லை
 • கல்வியறிவு இல்லாதவர்களிடம் குடியுரிமையை நிரூபிக்க எந்த விதமான ஆவணங்களும் இல்லையென்றாலும், சாட்சிகளின் அடிப்படையில் அவர்களது குடியுரிமை உறுதி செய்யப்படும்.
 • தன்னிச்சையாக குடியுரிமை வழங்கப்படமாட்டாது. குடியுரிமை பெறுவதற்கு தகுதியுடையவர்களாக இருந்து அதற்குரிய ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும்
 • 1987 ஆம் ஆண்டுக்கு முன்பாக இந்தியாவில் பிறந்தவர்களும், அவர்களின் வாரிசுகளும் இந்திய குடிமக்களாவர்.
 • அதேபோல், கடந்த 2004 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, குறிப்பிட்ட நபர்களின் பெற்றோரில் ஒருவர் இந்திய குடியுரிமை பெற்று மற்றவர்கள் முறையாக இந்தியாவில் குடியேறியவர்களாக இருந்தால் அவர்களும் இந்திய குடிமக்களாகவே கருதப்படுவர்

CAA, NRC ஐ நிராகரிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?:

 • அரசியலமைப்பு சட்டம் 7-வது அட்டவணையில் மத்திய மாநில அரசுகள் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட துறைகள் இடம்பெற்றுள்ளன
 • அதன்படி வெளியுறவு விவகாரங்கள், பாதுகாப்பு, குடியுரிமை, ரயில்வே, உள்ளிட்ட 97 விவகாரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் மீது சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு
 • மத்திய அரசு பட்டியலில் இடம்பெற்றுள்ள விவகாரங்கள் தொடர்பாக இயற்றப்படும் சட்டங்களை நடைமுறைப்படுத்த மறுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது.
 • மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மேற்கொள்ளப்படும் குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பானது குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில் நடைபெறும். அந்த கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் மாநில அரசு மறுப்பு தெரிவிக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *