பிரதமர் மோடி பிறந்த நாள் – அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக மோடிக்கு பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

டெல்லி, செப்-17

பிரதமர் மோடி இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடிக்கு பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் சில ஹேஷ்டேகுகளும் டிரெண்டிங் ஆகி வருகின்றன.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:- பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அவரது தலைமையில், நாடு வளர்ச்சி பெறுகிறது. மோடி தலைமையிலான அரசில் எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளால், இந்தியாவிற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர், நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ;- நமது பிரதமர், நாடுகளின் நட்புறவை பொறுத்தவரை இந்தியாவின் நிலையை கட்டியெழுப்புவதற்கும் பலப்படுத்துவதற்கும் முக்கிய பங்காக இருக்கிறார். “அவரது தொலைநோக்குத் தலைமை இந்தியாவுக்கு புதிய பெருமைகளை உயர்த்த உதவியுள்ளது. அவரது நல்ல ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் ”.

மத்திய ரயில்வேதுறை அமைச்சர் பியூஸ் கோயல் : பிரதமர் மோடி மிகப்பெரிய தலைவர். தீர்க்கமானவர். மோடி நம்க்கு மிகப்பெரிய முன்னோடி. நாம் அனைவரும் இணைந்து புதிய இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். மோடிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பல பாஜக தலைவர்களிடமிருந்தும், கட்சி முழுவதிலுமிருந்து வந்தவர்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் நள்ளிரவு முதல் கொட்டத் தொடங்கின.

பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடியின் 69-வது பிறந்தநாளையொட்டி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-

இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு எங்களது இதயப் பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுள் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், வலிமையையும் கொடுத்து நாட்டு மக்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற அருளுமாறு இறைவனிடம் வேண்டிக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

உங்களது 69-வது பிறந்த நாளில் எனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்கு சிறப்பாக சேவை செய்யவும், நீண்ட ஆயுளுடன் வாழவும், எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

உலகத்திலேயே இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவதற்கு நீங்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தனது வாழ்த்துச் செய்தியில், ‘நாட்டை ஆளும் பிரதமர் மோடி ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட காலம் வாழ வேண்டும்’ என கூறியுள்ளார்.

இதையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில், ‘திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மரியாதைக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இன்னும் பல ஆண்டுகள் பொது சேவையை தொடரவும் வாழ்த்துக் கூறுகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *