ரூ.10 கோடிக்கு செட்… முதல் காட்சியே ரொமான்ஸ்!!! வைரலாகும் அண்ணாச்சியின் புகைப்படங்கள்

டிசம்பர்-20

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் தனது சொந்த நிறுவன விளம்பரங்களில் நடித்து வந்தார். தற்போது புதிய படம் ஒன்றி ஒப்பந்தம் ஆகி நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக மாடல் அழகி ரித்திகா திவாரி நடித்து வருகிறார்.  இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர்

பிரபு, நாசர், விவேக், மயில்சாமி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடல் காட்சிக்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் கலந்து கொண்டனர். இந்த பாடல் கட்சிக்காக ரூ.10 கோடி செலவில் மிக பிரமாண்டமாக அரண்மனைப்போல் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்தது. சரவணனின் நடனத்தை பார்த்து வியந்து நடன கலைஞர்களும் கை தட்டி பாராட்டி உள்ளனர். இதையடுத்து அந்த பிரமாண்ட செட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

ஜொலிஜொலிக்கும் பிரமாண்ட செட்டில் மின்விளக்குகளுடன் 100-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்களுக்கு நடுவே அண்ணாச்சி ரித்திகா திவாரியுடன் ரொமான்ஸ் செய்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *