குடியுரிமை திருத்த சட்டம்: மக்கள் ஆலோசனை வழங்கலாம்

டெல்லி, டிசம்பர்-20

குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு குறித்து யார் வேண்டுமானாலும் தங்களின் யோசனைகள் அல்லது கருத்துக்களை தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு அமலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தேசிய குடிமக்கள் பதிவு அமல்படுத்துதல் அல்லது அறிமுகம் செய்வது ஆரம்ப நிலையிலேயே உள்ளது. அதனால் அது பற்றி என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம். சில மாநிலங்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மறுத்து வருகின்றன. சட்டத்தை அமல்படுத்துவது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.

யாரெல்லாம் அமல்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் இறுதி செய்வோம். டிஜிட்டல் மற்றும் எளிய முறையில் சட்டம் அமல்படுத்தப்படும் என்பதால் மக்களுக்கு எந்த பிரச்னையும் ஏற்படாது. அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு, ஆலோசித்த பிறகே சட்டம் கொண்டு வரப்படும். சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் செல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. போராட்டம் நடத்த மக்களுக்கும் உரிமை உண்டு. விருப்பமுள்ளவர்கள் அது தொடர்பாக ஆலோசனைகள், யோசனைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். சட்டத்தை கட்டமைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *