CAA எதிர்ப்பு பேரணிக்கு நடிகர்களை அழைத்த திமுக!!!

சென்னை, டிசம்பர்-20

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் வருகிற 23-ம் தேதி திமுக சார்பில் பேரணி நடைபெறவுள்ளது.

இந்த பேரணியில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாது, இந்த பேரணியில் மாணவர்கள், பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையே, நடிகர்கள் பலரும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், CAA எதிர்ப்பு பேரணியில் நடிகர்களும் பங்கேற்குமாறு திமுக நடிகர் சங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் தொழிற்சங்கம், வணிகர் சங்கம் உள்ளிட்ட சங்க தலைவர்களும் பேரணியில் கலந்துகொள்ளவேண்டும் என திமுக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *