மாற்றங்களை ஏன் எதிர்க்கிறீர்கள்-மோடி ஆதங்கம்

டெல்லி, டிசம்பர்-20

மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்தால் எதிர்ப்பு வருவதாகவும், அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டெல்லியில் அசோசாமின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: 5 லட்சம் கோடி பொருளாதாரத்தை அடைவது என்பது கானல் நீரல்ல. 6 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்றது. அதனை சரிவில் இருந்து மீட்டதோடு, பொருளாதாரத்தை நிலைபெற செய்துள்ளோம். தொழில்துறையினரின் பழங்கால கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். மாற்றங்களை கொண்டு வரும் போது, எதிர்ப்புகள் வருகிறது.

நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம். பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அனைவருக்காகவும், மத்திய அரசு ஓய்வின்றி உழைத்து வருகிறது. பொருளாதாரத்தின் பல துறைகள் முறைபடுத்தப்பட்டதுடன், நவீனப்படுத்தவும், வேகப்படுத்தவும் முயற்சி செய்கிறோம். தொழில்நுட்ப உதவியுடன் முன்னேறி வருகிறோம். எளிதாக தொழில் செய்யும் நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. அரசுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட விளைவுகளால் நாட்டின் பொருளாதாரத்தில் பேரழிவு ஏற்படவிருந்ததை தடுத்து நிறுத்தியது பாஜக அரசுதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *