43 வது சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 9ல் தொடக்கம்

சென்னை.டிசம்பர்.20

43வது சென்னை புத்தக கண்காட்சி வரும் ஜனவரி 9ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என்று தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள்  சந்திப்பில் பேசிய அவர், புத்தகக் கண்காட்சியில் தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் விதமாக கீழடி- ஈரடி என்ற தலைப்பில் தொல்லியல் துறையின் ஒத்துழைப்போடு பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

கண்காட்சி தொடங்குவதற்கு முன்னதாக ஜனவரி 6ம் தேதி  நடைபெற உள்ள ‘சென்னை வாசிக்கிறது’ என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 700க்கும் அதிகமான அரங்குகளில் 15 லட்சத்திற்கும் மேலான தலைப்புகளில் இரண்டு கோடி புத்தகங்கள் இடம் பெற உள்ளதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *